×

திருமுருகன் பூண்டி அருகே ராட்சத குழாய் உடைந்து குடிநீர் வீண்

திருப்பூர், பிப் 7:  திருப்பூர், திருமுருகன் பூண்டி அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. திருப்பூரின் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்திற்காக மேட்டுப்பாளையத்திலிருந்து அவிநாசி வழியாக திருப்பூருக்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.  திருமுருகன் பூண்டி வழியாக வரும் ராட்சத குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. மேலும், மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அதிகளவில் வீணாகிறது. குடிநீர் பற்றாக்குறைக்காக, பல இடங்களில் பொதுமக்கள் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரியம் உடைப்பை சரி செய்யாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் திருப்பூரில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் இதை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirumurugan Pundi ,
× RELATED 10,12ம் வகுப்பில் ஏ.வி.பி. ட்ரஸ்ட் நேஷனல்...